உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்: சேலத்தில் முதல்வர்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாநகர் மற்றும் புறநகர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. மற்றும் நீதிமன்றம் உத்தரவுபடி சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுகிறது. அரசுக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது. மேலும் அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர். அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும் எனவும் பேசினார். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது.
அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் எனவும் பேசினார். மேலும் அதிமுக ஆட்சியை கவிழ்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி செயல்படவில்லை. அதனால் அமமுகவை தொடங்கினார் என்றார்.
வருவாய்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நிதிநிலைமை பொறுத்து தான் அவர்களுக்கானதை அரசு செய்யும். மற்ற மாநிலங்களைபோல் கொரோனா காலத்திலும் தமிழகத்தில் சம்பள பிடித்தம் இல்லை என்றும் கூறினார்.
அதிமுகவில் எள்முனை அளவுகூட பிரச்சனை இல்லை. திமுகவினர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். மற்றும் மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவமனை கொண்டுவந்து அதிமுக சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் உதவி பெற்று ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது. வெடிகுண்டு மிரட்டல் குறித்த கேள்வி பதில் அளித்த முதல்வர் எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன் என்று கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu