களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
கொரொனா நோய்த்தொற்று காரணமாக பொது நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்கள் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை, முககவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிராமப்புற பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் அதிக அளவிலான கூட்டம் கூடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த சனிக்கிழமையன்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மூன்று நாள் நிகழ்ச்சியான திருவிழாவில் முதல் நாள் இன்று பொங்கல் வைத்தல் கரகம் எடுத்தல் அலகு குத்துதல் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
அதிகளவிலான பக்தர்கள் கோவில் பகுதியில் சூழ்ந்துள்ளதால், தீவட்டிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் இருக்கும் கோவில்களில் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பின்பற்றினாலும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் அரசு அறிவிப்புகளை பின்பற்றாமல் கோவில் திருவிழாவில்அதிக அளவிலான கூட்டத்தினை அனுமதிப்பது கொரொனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu