கிரிக்கெட் வீரர் நடராஜனுக்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்
X

சேலம் சின்னப்பம்பட்டியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவிக்க ஏற்படுத்திய மேடை அகற்றப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தனது சொந்த கிராமமான சேலம் தாரமங்கலத்தை அடுத்துள்ள சின்னப்பம்பட்டிக்கு மாலை வருகை தருகிறார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் சின்னப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடராஜன் குதிரை வண்டியில் ஏறி, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடராஜன் வீட்டின் அருகே வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏற்படுத்திய மேடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏற்கனவே போடப்பட்டிருந்த விழா மேடை அகற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் மற்றும் ஊர் மக்கள் கூட்டமாக கூடி வாழ்த்து தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி உறவினர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டிலேயே எளிமையான முறையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி