சேலத்தில் தொடரும் தட்டுப்பாடு: 5வது நாளாக இன்றும் தடுப்பூசி முகாம் இல்லை

சேலத்தில் தொடரும் தட்டுப்பாடு: 5வது நாளாக இன்றும் தடுப்பூசி முகாம் இல்லை
X
சேலத்தில் தொடரும் தட்டுப்பாடு காரணமாக 5 ஆவது நாளாக இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி முகாம் நடைபெறுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உரிய தேதியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் தினசரி ஒவ்வொரு மையமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு ஏதும் இல்லாததால், 5 ஆவது இன்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது