மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு
X
பைல் படம்
By - T.Hashvanth, Reporter |9 Aug 2021 9:00 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1621 கன அடியில் இருந்து சற்று உயர்ந்து 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 76.07 அடியாக இருந்து 74.99 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு : 37.14 டி.எம்.சியாக குறைந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,621 கன அடியிலிருந்தது 3,046 கன அடியாக அதிகரித்துள்ளது. வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu