மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர் 100 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 100 கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 82.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 44.92 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர் வரத்து வினாடிக்கு 15,479 கன அடியிலிருந்தது 19,068 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து வினாடிக்கு 100 கன அடியாக குறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடியிலிருந்து வினாடிக்கு 650 கன அடியாக குறைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை அளவு 22.60 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!