மேட்டூரில் சிறுமியை கடத்திய மினி பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

மேட்டூரில் சிறுமியை கடத்திய மினி பேருந்து ஓட்டுநர்  போக்சோ சட்டத்தின்கீழ் கைது
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை . இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் 13-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர் . விசாரணையில் கருப்பூர், மூங்கில் பட்டியை சேர்ந்த மினி பேருந்து ஒட்டுனர் மாரியப்பன் என்பவருடன் சிறுமி காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாரியப்பனின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் இருவரும் திருநெல்வேலியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மாரியப்பன் மற்றும் சிறுமியை மீட்டனர் . இருவரையும் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக மினி பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா