மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 600 லிட்டர் ஊறல் அழிப்பு

மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது -  600 லிட்டர் ஊறல் அழிப்பு
X

மேட்டூர் அருகே வனப்பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேட்டூர் அருகே வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர், கும்பாரப்பட்டி வனப்பகுதியில் சட்ட விரோத கும்பல்கள் முகாமிட்டு கள்ள சாராயம் காய்ச்சுவதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கும்பாரப்பட்டி வனப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இவர்களை சுற்றி வளைத்த போலீசார், ராஜி,மாது ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குருசாமி, முருகேசன், ரகு ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பாரப்பட்டியில் நடந்த சாராய சோதனையில் 600 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!