மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 34,144 கன அடியாக அதிகரிப்பு. நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 2 அடி உயர்வு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 34,144 கன அடியாக அதிகரிப்பு. நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 2  அடி உயர்வு
X

பைல் படம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 34 ஆயிரத்து 144 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அணையில் நீர் 2 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையடுத்து அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணசாகர் ஆகிய இரண்டு அணைகளும் நிரம்பிி வருவதால் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படமேட்டூர் அடிநீர்மட்டம் 75.340 அடியாக உள்ளது. நீர் இருப்பு 37.470 டி.எம்.சியாகவும் அணைக்கான நீர் வரத்து நேற்று வினாடிக்கு 19,665 கன அடியாக இருந்த நிலையில், இன்று அணைக்கான நீர்வரத்து 34,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!