மேட்டூர் அணையில் இன்று ( 6ம் தேதி) நீர்மட்டம் 72.69 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இன்று ( 6ம் தேதி) நீர்மட்டம் 72.69 அடியாக உயர்வு
X

பைல் படம்.

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 22,076 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.10 அடியிலிருந்து, 72.69 அடியாக உயர்ந்தது.

நீர்இருப்பு 35.05 டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 22,875 கன அடியிலிருந்து 22,076 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்