மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 22,875 கன அடியாக அதிகரிப்பு
X
மேட்டூர் அணை.
By - T.Hashvanth, Reporter |5 Sept 2021 2:45 AM
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.39 அடியிலிருந்து, 71.10 அடியாக உயர்ந்தது.
நீர்இருப்பு 33.65 டி.எம்.சி.,யாகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu