மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 40,000 கன அடியாக சரிவு
X
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து காலை 45 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 40,000 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40000 கன அடியாக சரிவு.

மேட்டூர் அணையின் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.10 அடி , நீர் இருப்பு : 93.63 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து காலை 45 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 40,000 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 17,000 கன அடியும், 16-கண் மதகு வழியாக 23,000 கன அடி என மொத்தம் 40,000 கனஅடி காவிரியில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!