மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிவு..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிவு..!
X

மேட்டூர் அணை(கோப்பு படம்) 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.1) இன்று காலை 8 மணி நிலவரப்படி 59.82 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (ஏப்.1) இன்று காலை 8 மணி நிலவரப்படி 59.82 அடியாக சரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று முன்தினம் 200 கன அடியாக இருந்த நிலையில், நேற்று 1000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக இன்று வினாடிக்கு 46 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரத்தை காட்டிலும் நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 60.14 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 59.98 அடியாக சரிந்தது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு 24.553 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 59.82 அடியாக சரிந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கர்நாடக பகுதிகளில் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தற்போது கர்நாடாவிலும் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க