மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: உபரிநீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: உபரிநீர் வெளியேற்றம்
X
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து காலை முதலே அதிகரித்து வந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41 ஆண்டாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 2019 ஆம் ஆண்டு அணை முழு கொள்ளளவை எட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

மேட்டூர் அணை நிரம்பியதால் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக உபரி நீர் வெளியேற்றி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!