மேட்டூர் அணையின் நீர்வரத்து 973 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 973 கனஅடியாக அதிகரிப்பு
X
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து, 973 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர்இருப்பு : 61.18 டி.எம்.சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, நேற்று காலை 684 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து, வினாடிக்கு 973 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!