மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
X
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்: 108.35 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 76.08 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 792 கன அடியிலிருந்து 846 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று மாலையுடன், பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தபட்டது. ஆண்டு தோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் தேவை குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தால், அணையின் நீர் இருப்பை பொருத்து, கூடுதல் நாட்கள் திறக்கப்படும். தற்போது விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காததால் உரிய தேதியான நேற்றுடன் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai in future education