நிரம்பும் மேட்டூர் அணை: காவிரி கரையோரம் வெள்ள அபாயம் - கலெக்டர் ஆய்வு

நிரம்பும் மேட்டூர் அணை: காவிரி கரையோரம் வெள்ள அபாயம் - கலெக்டர் ஆய்வு
X

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அணையை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.61 அடியாக உள்ள நிலையில், அணையின் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்ட உள்ளது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். அணையின் நீர்வரத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கார்மேகம் கூறும்போது, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நாளை மாலை அல்லது இரவுக்குள் எட்டிவிட வாய்ப்புள்ளது. இதனால் காவிரிக் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவிரிக் கரையோரங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, தண்டோரா மூலம் நீர் நிலைகள் பக்கம் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் குளிப்பதோ, செல்போனில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். மேட்டூர் அணை 120 அடியை எட்டிய பிறகு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அனையை வருவாய்த்துறை மருத்துவம் வேளாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story