மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
X
கோப்பு படம்
By - T.Hashvanth, Reporter |21 Oct 2021 8:15 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,409 கன அடியில் இருந்து, 10,559 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 94.20 அடியாக இருந்தது. அணையின் நீர்இருப்பு 57.58 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 15,409 கன அடியில் இருந்து, 10,559 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு மேட்டூர் அணையில் இருந்து, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu