மேட்டூர் அணை நீர்மட்டம் 74.69 அடி

மேட்டூர் அணை  நீர்மட்டம் 74.69 அடி
X

கோப்பு படம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி, 74.69 அடியாக இருந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 74.69 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர்இருப்பு : 36.86 டி.எம்.சியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 9,483 கன அடியில் இருந்தது 9,750 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் பதிவான மழை அளவு 2.00 மி.மீ. ஆகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!