சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது

சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது
X

மேட்டூர் ஜலகண்டாபுரத்தில், மதுபாட்டில் கடத்தல் குறித்து விசாரணை நடத்திய போலீசார். 

மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரைபோலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்கத்து மாவட்டமான தர்மபுரியில் இருந்து சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்று மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வேல்முருகன், சதீஸ், செல்வராஜ், பிரகாஷ்,வேலு, செல்வம்,ரவிசங்கர் ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 131 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், இரு சக்கர வாகனத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு மது வாங்க சென்ற ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 3 பேர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது