மேட்டூர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

மேட்டூர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில்  சின்னம் பொருத்தும் பணி தீவிரம்
X

மேட்டூரில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

மேட்டூர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் நகராட்சியில் சுமார் 48 ஆயிரம் வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 30 வார்டுகளில் 159 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ளதால் 55 வாக்குப்பதிவு மையத்திற்கு 66 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சின்னத்திற்கு வாக்குகள் பதிவாகிறதா என்பதனையும் பரிசோதனை செய்து பார்த்தனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!