மேட்டூரில் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்திவைப்பு

மேட்டூரில் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்திவைப்பு
X

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காவிரி-சரபங்கா நீரேற்றம் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் காலவரையற்ற பட்டினி போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் மேச்சேரி ஒன்றியம், மல்லப்பனூர் பிரிவு, மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தோட்டத்தில் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை துவக்கினர்.

இதனையடுத்து, துவங்கியவுடன் மேட்டூர் தாசில்தார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பந்தலுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். திட்ட அலுவர் மேட்டூர் சார் ஆட்சியரிடம் திங்கள்கிழமை 24.1.2022 காலை நேரில் சந்தித்து குறைகளை பேசிடலாம், கொரானா காலம் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள் எனக் கூறினார்.

இந்த நிலையில் தாசில்தார் மற்றும் டிஎஸ்பி.,யின் வாக்குறுதியை ஏற்று, தற்போது போராட்டத்தை திங்கட்கிழமை வரை ஒத்தி வைத்தனர். கோரிக்கையை ஏற்கவில்லை எனில், 25.1.2022 முதல் காலவரையற்ற பட்டினி போராட்டம் தொடருவோம் என கூறி, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள் தெரிவுத்தனர்.

இதில் பாதிக்கப்படும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடனும், ஆடு மாடுகளுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story