சேலத்தில் அரசுப் பேருந்து ஜப்தி: விபத்து இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் அதிரடி

சேலத்தில் அரசுப் பேருந்து ஜப்தி: விபத்து இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் அதிரடி
X

ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து.

சேலத்தில் விபத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மேட்டூரை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் என்பவரின் வலது கை துண்டானது. இது தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு மகேந்திரன் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த இரண்டாவது சிறப்பு கூடுதல் சார்பு நீதிமன்றம் நீதிபதி பழனி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம், விபத்தில் வலது கையை இழந்த மகேந்திரனுக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார் .

ஆனால் இதுவரை அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈட்டுத் தொகையை மகேந்திரனுக்கு வழங்காததால், மீண்டும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர், நிறைவேற்றுதல் மனு செய்தார். இதனையடுத்து கடந்த வாரம் நீதிபதி பழனி சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் உடனடியாக இருபத்தி ஒரு லட்ச ரூபாயை மகேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசு பேருந்து ஒன்றினை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

ஆனாலும் சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நீதிமன்றம் கூறிய நஷ்ட ஈட்டுத் தொகை வழங்காததால், இன்று பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் ரமேஷ் சங்கர் என்பவர் பாதிக்கப்பட்ட நபர் மகேந்திரன் மற்றும் நீதிமன்ற அமீனா கார்த்தி என்பவருடன் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தனர். அங்கு சிதம்பரம் செல்ல தயாராக இருந்த அரசு பேருந்தினை ஜப்தி செய்தனர். இதனால் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்