மேச்சேரி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

மேச்சேரி ஊராட்சியில்  பல லட்சம் ரூபாய் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்த 6 கவுன்சிலர்கள்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கவுன்சிலர்கள் 6 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

சேலம் மாவட்டத்தில் 15 கவுன்சிலர்களை கொண்ட மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 3, 4, 7, 10, 11, மற்றும் 13 ஆவது வார்டு கவுன்சிலர்கள் 6 பேர் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு திலீப்குமார் என்பவருக்கு அந்த பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், டெங்கு காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு பணிக்கு 30 நபர்களிடம் தலா 50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு நியமனம் செய்து, அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 357 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பலர் பணிக்கு வராமலேயே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுமட்டுமின்றி 500 மூட்டைகள் ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கவுன்சிலர்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி தற்காலிகப் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் முறையற்ற கணக்குகளை காண்பித்து பல லட்சம் ரூபாயை சுருட்டிய அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story