குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் : தமிழக முதல்வர்
.சேலம் மேச்சேரி பகுதியில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களை அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை அவதூறாக திமுக கட்சியினர் பேசி வருகின்றனர்.திமுக கட்சி அல்ல, கம்பெனி. இதில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் பதவியில் இருக்க முடியும். திமுக கட்சி அடாவடி,அராஜகம் செய்து குடும்பத்திற்கு நன்மை செய்து வருகின்றனர். திமுக குடும்ப வளர்வதற்கும், குடும்பம் கொள்ளையடிப்பதற்காக கட்சி நடத்தி வருகின்றனர்.
எனவே தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த சட்டமன்ற தேர்தல் அமையும் என்றும் பேசினார்.திமுக குடும்பமே சேலத்தை சுற்றி சுற்றி வந்து பிரச்சாரம் செய்து வந்தது. எத்தனை முறை சுற்றி வந்தாலும் சேலத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் பேசினார்.
தமிழகத்தில் அதிகாரிகளை மிரட்டி ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுகவினரின் திட்டம் வெற்றி பெறாது. ஆனால் இயற்கையும் இறைவனும் அதிமுக பக்கம் உள்ளனர். தற்போது திமுகவில் 20 பேர்களின் வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். இவர்கள் எல்லாம் வெற்றி பெற்று வந்தால் நாடு தாங்குமா என விமர்சனம் செய்த முதல்வர், திமுக பல அதிகார மையங்களை வைத்துள்ள கட்சியாக திகழ்வதாக கூறினார்.
விவசாயி ஆட்சியாக மட்டுமல்லாமல் விவசாயிகள் எப்பொழுது எல்லாம் பாதிக்கப்படுகிறார்களே, அப்போதெல்லாம் விவசாயிகளை மீட்டெடுத்து, வளமோடு,சிறப்போடு வாழ வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தந்திரத்துடன் மாயாஜாலம் செய்து பல வாக்குறுதிகளைஅளித்து மக்களை ஏமாற்றி வந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu