/* */

நங்கவள்ளரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் ரகளை: தேர்தல் ஒத்திவைப்பு

மேட்டூர் அடுத்த நங்கவள்ளரி பேரூராட்சி தலைவர் தேர்தலை நடத்த விடாமல் திமுக கவுன்சிலர்கள் நாற்காலியை வீசி ரகளையில் ஈடுபட்டு வெளியேறினர்.

HIGHLIGHTS

நங்கவள்ளரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் ரகளை: தேர்தல் ஒத்திவைப்பு
X

ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக.2, பாமக 2,பிஜேபி 1 சுயேட்சை 4, திமுக 3, காங்கிரஸ் 3 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் நங்கவள்ளி பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு 8 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் திமுகவினருக்கு 7 கவுன்சிலர்கள் மட்டுமே ஆதரவு உள்ளது.

அதிமுக 2, பாமக 2, பிஜேபி 1, சுயேட்சைகள் 3 பேர் என மொத்தம் 8 கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு ஆதரவு உள்ளது. இதனால் நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் பதவி அதிமுகவினர் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

இதனால் நங்கவள்ளரி பேரூராட்சி தலைவர் தேர்தலை நடத்த விடாமல் திமுக கவுன்சிலர்கள் நாற்காலியை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மறு தேதி அறிவிக்காமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On: 4 March 2022 6:15 AM GMT

Related News