மேட்டூர் அணையில் டெல்டா பாசன நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு
X
பைல் படம்.
By - T.Hashvanth, Reporter |3 Sept 2021 3:00 PM IST
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 14 ஆயிரத்திலிருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 68.55 அடியாகவும், நீர்இருப்பு 31.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,871 கன அடியிலிருந்து 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசன வசதிக்காக திறக்கப்படும் நீரின் அளவு இன்று மதியம் 2:00 மணி முதல் 14 ஆயிரம் கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu