கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை
X
ஆடி பண்டிகையின்போது மேட்டூர் அணை பூங்கா மற்றும் காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு, துணை ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது பொதுப்போக்குவரத்தும், பூங்காக்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை ஆடிப்பண்டிகை என்பதால் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், மேட்டூர் அணைக்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கையும், வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

எனினும், தற்போது கொரானா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால், அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்க, நாளை 17 தேதி மற்றும் 18 -7-2021 ஆகிய இரண்டு நாட்கள், மேட்டூர் அணை பூங்கா மற்றும் மேட்டூர் அணை பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் மேட்டூர் அணைக்கு மற்றும் பூங்காவிற்கு நாளையும், நாளை மறுநாளும் வர வேண்டாம் என சேலம் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!