மேட்டூர் அணையில் நீர்திறப்பு 40,000 கன அடியாக மேலும் அதிகரிப்பு

மேட்டூர் அணையில் நீர்திறப்பு  40,000 கன அடியாக மேலும் அதிகரிப்பு
X
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 40,000 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் 2 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.00 அடி, நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது, இன்று காலை 28,000 கன அடியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து, 35,000 கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில், காவிரியில் நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் பாலம் மதகு வழியாக 18,000 கன அடியாகவும், அணை, சுரங்க மின் நிலையம் வழியாக 22,000 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. கால்வாய் வழியாக 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!