/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக சரிவு

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 56.83 அடியாக சரிந்தது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக சரிவு
X

Salem News- மேட்டூர் அணை.

Salem News, Salem News Today- மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 56.83 அடியாக சரிந்தது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (11ம் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (12ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 57.03 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 56.83 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 22.38 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 12 April 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு