மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு..!

மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு..!
X

Salem News- மேட்டூர் அணை.

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (ஜூன்.15) இன்று காலை 8 மணி நிலவரப்படி 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது.

Salem News, Salem News Today- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (ஜூன்.15) இன்று காலை 8 மணி நிலவரப்படி 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு 120 அடி ஆகும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து நேற்று (ஜூன்.14) வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 149 கன அடியாக இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக சனிக்கிழமை (ஜூன்.15) இன்றும் நீர்வரத்து வினாடிக்கு 149 கன அடியாகவே நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 43.10 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 42.87 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 13.61 டிஎம்சியாக உள்ளது.

மேலும், மேட்டூர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1.8 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!