தடுப்பூசி செலுத்துவதில் புதிய முயற்சி -சேலம் கலெக்டரின் புது வியூகம்

தடுப்பூசி செலுத்துவதில் புதிய முயற்சி -சேலம் கலெக்டரின் புது வியூகம்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

தேர்தலில் வாக்களிக்கும் முறையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் புதிய முயற்சியை கலெக்டர் கையில் எடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்கும் முறையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் புதிய முயற்சியை மாவட்ட ஆட்சியர் கையில் எடுத்துள்ளார்.

தடுப்பூசி பெரும் முகாம்மிற்கு தேர்தலைப் போலவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போட பூத் சிலிப் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 76 ஆயிரத்து 548 நபர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. கொரோனா தடுப்பூசி 90 சதவீத இலக்கை அடைய இன்னும் 40 நாட்கள் ஆகும். சேலம் மாவட்ட மக்களுக்கு முதல் தவணை 48 சதவீதமும்,இரண்டாம் தவணை 18 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 60 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பெரும் முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 1235 வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் என மொத்தமாக 1356 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அன்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக இலக்கு கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 18 ஆயிரத்து 525 தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளனர். இதனை கண்காணிக்க 255 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலைப் போலவே வீடு வீடாக சென்று தடுப்பூசி போட பூத் சிலிப் வழங்கப்படும்,இதனை பெற்றுக் கொண்டு அந்தந்த மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சராசரியாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும்,இந்த முகாமிற்காக கூடுதல் தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!