சேலம் மாவட்டத்தில் நாளை 1392 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் நாளை 1392 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் 1392 மையங்களில் 1,72,170 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோவிட் -19 தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட 16,63,265 நபர்களுக்கு முதல் தவணையும் 5,40,596 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 12.09.2021 அன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,19,706 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 19.09.2021 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் 82,892 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 26.09.2021 அன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,10,317 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாளை நான்காம் கட்டமாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இம்முகாமுக்களுக்கென 1,72,170 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளன. இம்முகாமானது நாளை காலை 7.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை நடைபெற உள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil