மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடி
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இரண்டாவது நாளாக நேற்றும், வினாடிக்கு 200 கன அடியாக நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று (6ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (7ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 50 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து கால்வாய் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 58.42 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 58.14 அடியானது. நீர் இருப்பு 23.32 டிஎம்சியாக உள்ளது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil