சேலம் மாவட்டத்தில் இன்று 1,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் இன்று 1,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
பைல் படம்.
சேலம் மாவட்டத்தில் இன்று 1,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1745 ஆக உள்ளது. மேலும் 994 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 1,09,629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,750 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 8376 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். நேற்று 1387 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது