சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

பைல் படம்.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்குவதால் வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று வானிலை மையம் தமிழக முழுவதும் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாளையும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!