சேலத்தில் கொரோனா சந்தேகங்களுக்கு ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்நோய் தொற்று குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா உதவி மையத்தின் தொலைபேசி எண்கள் 0427- 2452202 அல்லது 0427- 1077 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா குறித்த ஆலோசனைகள், தகவல்களை பெறலாம்.
இதை தவிர சேலம் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்திலும் 0427 - 2450022, 2450498 & 9154155297 ஆகிய தொலைபேசி எண்ணுடன் கூடிய கொரோனா உதவி மையம் செயல்பட்டு வருகின்றது.
எனவே பொதுமக்கள் இந்த தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் நோய் குறித்த சந்தேகங்கள், விவரங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா நோய் தொடர்பான சந்தேகங்கள், சிகிச்சைக்கான விளக்கங்கள், சிகிச்சை தரும் மருத்துவமனைகள், கொரோனா கவனிப்பு மையங்கள், தடுப்பூசி போடும் இடங்கள், காய்ச்சல் முகாம் நடத்தப்படும் இடங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu