மாணவர் கல்விக்கடனுக்கு உதவி மையம் : சேலம் கலெக்டர் தகவல்
உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக, சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏழை, எளிய மாணவியர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கார்மேகம், கல்வி கடன் வழங்குவதன் மூலம் உயர்கல்வி பயில இயலாமல் இடைநிற்கும் மாணவ, மாணவியர்களின் விகிதத்தினை குறைக்க இயலும். மாவட்ட அளவில் கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி மையம் தொடங்கப்படும் என்றார்.
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும், அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும் பெற இயலும். வங்கியாளர்கள் கல்வி கடன் பெற வரும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் குறித்த தெளிவான விவரங்களையும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் தெளிவாக விளக்க வேண்டும். மாவட்ட அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பொறுப்பு அலுவலராக திட்ட அலுவலரை நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu