சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
X

பைல் படம்

Salem news today - சேலம் மாவட்டத்தில் நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.

Salem news today -சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

ஒன்றிய, மாநில அரசு ஆணைகளின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2023ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், “Meri Maati, Mera Desh” (என்னுடைய தாய் மண், எனது தேசம்) நிகழ்ச்சிக்காக மரக்கன்றுகள் நடுதல், ஊராட்சியில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள்,கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. மேற்கண்ட கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா