சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில்  அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  கிராம சபைக் கூட்டம்
X

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் 02.10.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 02.10.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 02.10.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

ஒன்றிய, மாநில அரசு ஆணைகளின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2023ம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் (குடிநீர்) இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's Plan Campaign) காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், ஊராட்சியில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு / பெண் கல்வியறிவு சதவீதம், ஆண்/பெண் குழந்தை பிறப்பு விகிதம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பயன்பாடு, விளிம்பு நிலை மக்களுக்கான மயான வசதிகள், மயான அணுகு சாலைகள் குறித்து விவாதித்தல் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil