ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

ஆத்தூர் வட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
X

வடசென்னிமலையில் வீடு ஒன்றை சூழ்ந்துள்ள மழை வெள்ளம். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது; இதனால், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

கடந்த சில நாட்களாகவே சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மழை பெய்வதும், அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படுவதுமாக வானிலை இருந்து வந்தது.
இந்த சூழலில், சேலம் மாவட்டம் ஆத்தூர், கங்கவல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில், இன்று மாலை ஏழு மணியளவில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட, வடசென்னிமலை, வளையமாதேவி, காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, சார்வாய் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இந்த மழை நீடித்தது.
இந்த மழையால், தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கியது. கனமழையால் ஆத்தூர் நகரில், வாகன நெரிசல் ஏற்பட்டது. தற்போதைய மழையால், சுற்றுப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி, விவசாயத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil