பரபரப்பான சேலம் நகரில் முழு ஊரடங்கால் அமைதி!
முழு ஊரடங்கால் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் சேலம் மாநகரம்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட பகுதிகளில் முழு ஊரடங்கானது, பொதுமக்களின் ஒத்துழைப்போடு அமைதியான முறையில் கடைபிடிக்கப்பட்டது.
பொதுவெளிகளில் உரிய காரணங்களின்றி சுற்றி திரிபவர்களை கண்காணிக்க சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 30 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் ஊர்க்காவல் படையினர் உள்பட 500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல், மாநகர பகுதிகளில் 29 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் வருவோர் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியே செல்வதற்கான உரிய காரணங்கள் குறித்து விசாரிக்கப்பட்ட பிறகே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
செயல்பட அனுமதிக்கப்பட்ட உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. பொது முடக்கம் காரணமாக சேலத்தில் முக்கிய வர்த்தக மையங்களாக சின்னக்கடை வீதி முதல் அக்ரஹாரம் செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட இடங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu