எடப்பாடி அருகே விவசாய சங்கங்கத்தினர் வயல்வெளி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி அருகே அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வயல்வெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எடப்பாடி வட்டம் ஆடையூர் கிராமத்திலுள்ள தாலப்பள்ளத்தில் நிவாரணத் தொகையை உயர்த்த கோரி உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வயல்வெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தெரிவிக்கையில், சேலம் மாவட்டம், இடைப்பாடி வட்டம், பூலாம்பட்டியிலிருந்து எடப்பாடி ஆடையூர் துணையின் நிலையம் வரை செல்லும் உயர்மின் கோபுரமானது கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள 126 விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக 31 வானளாவிய கோபுரங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் கேபிள் வழியாக கொண்டு செல்லுமாறு விவசாயிகள் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவித்தும். அரசு அதிகாரிகள் காவல்துறையினரை வைத்து விவசாயிகளை மிரட்டி இந்த திட்டத்தை அமல்படுத்தினார்கள்.
அதுசமயம் விவசாயிகளை திரட்டி கூட்டியக்கம் சார்பில் போராடியதின் விளைவாக குறைந்த பட்சம் மரம் பயிருக்கான இழைப்பீடு அன்றைய அதிமுக அரசால் வழங்கப்பட்டது. மேலும் அதிகபட்ச இழப்பீடு நிலத்திற்கு கொடுகக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து திட்டத்தை அமுல்படுத்தினார்கள். இந்த திட்டத்தினால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளைநிலங்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு முறைகள் கலைக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் அதிமுக அரசானது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு தேர்தல் வாக்குறுதியாக மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் உயர் மின்னழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நல்ல இழப்பீடு தருவதாகவும் இதுபோன்ற சிறிய திட்டங்களை கேபிள் வழியாக கொண்டுசெல்லபடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் நிலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ன் படி சந்தைமதிப்பிலோ அல்லது தற்போது வழங்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் 100சதவிகத்தில் இரண்டே முக்கால் மடங்கு என்பதை 200சதவிகத்தில் இரண்டே முக்கால் மடங்காகவும் கம்பிவழி பாதையில் பாதிக்கப்படும் நிலத்திற்கு 20சதவிகத்தில் இரண்டே முக்கால் மடங்கு என்பதை 100சதவிதத்தில் இரண்டே முக்கால் மடங்காக உயர்ந்த கோரி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எடப்பாடி வட்டம் ஆடையூர் கிராமத்திலுள்ள தாலப்பள்ளம் பாதிக்கப்பட்ட விவசாயி ஜெயவேல் தலைமையில் அவருடைய தோட்டத்தில் வயல்வெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேலம் மாவட்ட செயலாளர் மற்றும் அனைத்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுக்கா செயலாளர் ராஜேந்திரன், எடப்பாடி தாலுக்கா CPIM தாலுக்கா செயலாளர் பெரியண்ணன், சங்ககிரி விவசாய சங்க நிர்வாகி தஸ்தகீர் மற்றும் பெண்கள் உட்பட 50க்கு மேற்பட்ட விவசாயிகள் வயல்வெளி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அரசு நிர்வாகம் விரைந்து தீர்வு காணும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்றா, அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைந்து ஆடையூர் துணைமின் நிலையத்தை முற்றுகையிடுவதை தவிர வேறுவழியில்லை என்று கூட்டியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu