சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்

சேலத்தில் இன்று வழக்கம் போல் செயல்படும் உழவர் சந்தைகள்
X
சேலத்தில், இன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, பொது போக்குவரத்து மட்டுமின்றி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள் கிடைக்க ஏதுவாக, இன்று தமிழகம் முழுவதும் 179 உழவர்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர்சந்தைகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, உழவர் சந்தைகளில் மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, கிருமி நாசினி பயன்படுத்தி சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை விற்க வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!