கொரோனாவில் இருந்து தப்ப இதுதான் வழி: சேலம் கலெக்டர் அட்வைஸ்

கொரோனாவில் இருந்து தப்ப இதுதான் வழி:  சேலம் கலெக்டர் அட்வைஸ்
X
கொரோனோவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சேலம் கலெக்டர் அறிவுறுத்தி இருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில், கொரோனோ நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனோ தொற்று பரவல் அதிகரித்து வருவதை முழுமையாக தடுக்க, பொதுமக்கள் அனைவரும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு, கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அங்கீகரிக்கப் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கோவிசீல்டு தடுப்பூசி, முதல் தவணையாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 364 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 46 ஆயிரத்து 683 நபர்களுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 647 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கோவாக்ஸின் தடுப்பூசி, முதல் தவணையாக 34 ஆயிரத்து 918 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 2163 நபர்களுக்கும் என, மொத்தம் 37 ஆயிரத்து 81 நபர்களுக்கு கோவாக்சீன் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

இந்த நோய்த்தொற்று ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர்ந்து முககவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!