சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
X

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சக்திவேல்.

சேலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி பரமலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(22) என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டிலிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சிறுமியின் தாயார் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில், எடப்பாடி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுக் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் விசாரணை செய்து சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி வழக்கில் விரைவான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை போக்சோ சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், குற்றவாளி சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story