எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து எடப்பாடி பஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வார்டு உறுப்பினர் பதவிக்கு 169 இடங்களில் போட்டியிட்டு 130 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையத்தில் எடப்பாடி நகரம் மற்றும் ஒன்றியங்கள் சார்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தலைவர் கனகராஜ், நகர செயலாளர் குட்டிமுருகன், எடப்பாடி தெற்கு ஒன்றிய தலைவர் பிரபு, எடப்பாடி இளைஞரணி மற்றும் மாணவரணி,தொண்டரணியினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!