எடப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
X

எடப்பாடி ஏரிக்காடு குடியிருப்பு பகுதியில் டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், தடுப்புகள் அமைத்து இன்று திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எடப்பாடி அருகே ஏரிரோடு குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று கடையின் முன் கூடி, முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தகவலறிந்து வந்த எடப்பாடி காவல்துறை ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன், அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மதுபானக்கடையை திறக்க அனுமதி அளிக்கமாட்டோம் என கூறிய பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரமாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story