எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
X

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி பகுதியில் ஊடரங்கை மீறி காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள்

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாததும் போல் உள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் அனைத்து காய்கறி கடைகளையும் மூடப்பட்டு காய்கறிகளை வாகனங்கள் மூலம் விற்க்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களாக பூலாம்பட்டி ரோடு புறவழிச்சாலைகளில் இருபக்கங்களிலும் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடைகளை போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டமாக கூடி காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.இங்கு போடப்படும் காய்கறி கடைகளுக்கு நகராட்சி மூலமாக வரி வசூல் செய்யப்படுகிறது.

எடப்பாடி நகராட்சி எல்லையில் காய்கறிக்கடை போடுவது தொடர்பாக நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது,

கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மொத்த காய்கறிகளையும் வெளிப்பகுதியில் வைத்து நடமாடும் காய்கறி கடைக்கு மாற்றுவதற்கு மட்டுமே பூலாம்பட்டி ரோடு புறவழிச்சாலைக்கு மாற்றபட்டது என கூறினார். ஆனால் இங்கு 10க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை போட்டு வியாபாரிகள் விற்பனை செய்வதால் காய்கறி வாங்குவதற்க்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!