கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தேரோட்டம்

கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தேரோட்டம்
X

கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் பெருமாள் சுவாமிக்கு புரட்டாசி மாத பெளர்ணமி தேரோட்டம் நடைப்பெற்றது.

எடப்பாடி அடுத்த கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி தேரோட்டம் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் கல்லபாளையம், நாச்சிருத்தான்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானகந்தசாமி திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விசேஷ நாட்களை தொடர்ந்து ஒவ்வெறு மாதமும் சஷ்டி, கிருத்திகை பவுர்ணமி ஆகிய நாட்களில் ஸ்ரீ ஞான கந்தசாமிக்கு சிறப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதனை தொடர்ந்து இந்த வருடம் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் திங்கட்கிழமை பெருமாள் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தேரில் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி தேரோட்டம் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story